பயிற்சியாளருக்கு ஆசிரியர் தின வாழ்த்து; நன்றி மறக்காத விராட் கோலி
ஆசிரியர் தினத்தையொட்டி விராட் கோலி தனது பயிற்சியாளருக்கு ஆசிரியர் தின வாழ்த்து கூறியிருக்கிறார்.
நாடுமுழுவதும் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி சினிமா பிரபலங்களும் கிரிக்கெட் பிரபலங்களும் அரசியல்வாதிகளும் பொதுமக்களும் நன்றியோடு வாழ்த்துகளை தங்கள் ஆசிரியர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராக் கோலி தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களை விட்டுவிட்டு வித்தியாசமாக தான் கிரிக்கெட்டில் உயர காரணமாக இருந்த பயிற்சியாளருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஆசிரியர் தின வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
இன்று தனது ட்விட்டர் பதிவில், ”உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மதிப்புமிக்கப் பாடங்களை கற்றுக்கொடுப்பவர் ஆசிரியர்தான். அந்த மதிப்புமிக்கப் பாடங்களை எனது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவிடம்தான் எனக்கு கிடைத்தது. அதற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்படி மாணவர்களை வழிநடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்” என்று வித்தியாச ஆசிரியர் தின வாழ்த்து சொல்லியிருக்கிறார்.