\
ஐசிசி டி20 தரவரிசை: கோலிக்கு 4 ஆவது இடம் - பந்துவீச்சில் டாப் 10ல் இந்தியர்கள் யாருமில்லை

ஐசிசி டி20 தரவரிசை: கோலிக்கு 4 ஆவது இடம் - பந்துவீச்சில் டாப் 10ல் இந்தியர்கள் யாருமில்லை

ஐசிசி டி20 தரவரிசை: கோலிக்கு 4 ஆவது இடம் - பந்துவீச்சில் டாப் 10ல் இந்தியர்கள் யாருமில்லை
Published on: 

ஐசிசி வெளியிட்டுள்ள டி20 தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய கேப்டன் விராட் கோலி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்தின் டேவிட் மலான் 841 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இதற்கடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 819 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 733 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 717 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார். இதில் மற்றொரு இந்திய வீரரான கே.எல் ராகுல் 699 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.

பவுலர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி 775 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இலங்கையின் ஆல் ரவுண்டர் வணிந்து ஹசரங்கா 747 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 719 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் இருக்கிறார்கள். இதில் முதல் 10 இடங்களில் எந்தவொரு இந்திய பந்துவீச்சாளர்களும் இடம்பெறவில்லை. அதேபோல பாகிஸ்தானை சேர்ந்த பவுலர்களும் இடம்பெறவில்லை.

இதில் 12 ஆம் இடத்தில் புவனேஷ்வர் குமாரும், வாஷிங்டன் சுந்தர் 18 ஆம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். உலகக் கோப்பை டி20 போட்டி அடுத்தமாதம் தொடங்க இருக்கும் நிலையில் ஐசிசி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com