சமூகவலைதளங்களில் இரண்டு நாட்களாக தாய்க்கு பயந்து கதறி அழும் குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. குழந்தை ஒன்று படிக்க சொல்லி அவரது தாய் கொடுமை படுத்துவது போன்ற அந்த வீடியோவை இந்திய அணியின் தலைவரான விராத் கோலி தனது இன்ஸ்டிராகிராமில் பதிவேற்றியுள்ளார்.
அதில் ஒரு பெண் குழந்தைக்கு அவரது தாய் கடக்கு பாடம் கற்பிக்கும் போது, மிக கொடூரமாகவும் மிருகத்தனமாகவும் நடந்து கொள்கிறார். இந்த மிரட்டலுக்கு பயந்த அக்குழந்தை இரு கை கூப்பி வேண்டாம், வேண்டாம் என்பது போல் கதறி அழுகிறது. இதற்கு கோலி, ’குழந்தையின் வலியும் கோபமும் புறக்கணிக்கப்பட்டு, பாடம் கற்பிக்கும் போது தாயின் இரக்கம் முற்றிலுமாக ஜன்னல் வழியாக வெளியேறிவிட்டது. இந்த வீடியோவை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. குழந்தையிடம் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்டால், அக்குழந்தைக்கு பாடம் ஏறாது. இதை பார்த்து மிகவும் மனம் வருத்தமடைகிறது’ என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
இதே போன்று இந்திய கிரிக்கெட் வீரர் தவானும் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்து குழந்தைகளை அவர்கள் போக்கில் படிக்க விடுங்கள் என்று கூறியுள்ளார்.