16 வயது படத்தை பதிவிட்ட கோலி - சல்மானுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்

16 வயது படத்தை பதிவிட்ட கோலி - சல்மானுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்

16 வயது படத்தை பதிவிட்ட கோலி - சல்மானுடன் ஒப்பிட்ட ரசிகர்கள்
Published on

இந்திய கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் விராட் கோலி ஜொலித்து வருகிறார். இந்திய அணியில் தொடர்ச்சியாக ஃபார்மில் இருப்பவர் விராட் கோலி மட்டும்தான். 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக இவர் விளையாட தொடங்கினார். அதற்கு முன்பாக இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் சிறப்பாக பங்காற்றினார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை 15 ஆண்டுகளை கடந்துவிட்டது.

இந்நிலையில், தன்னுடைய 16 வயதில் எடுத்த புகைப்படத்தையும், சமீபத்தில் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக இணைத்து விராட் கோலி தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். விராட் கோலி பதிவிட்ட படத்திற்கு அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். குறிப்பாக இளம் வயது முதல் தற்போது வரை அவரது உருவத்தில் மட்டுமல்ல திறமையிலும் நிறையவே மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் பாராட்டினர்.

ரசிகர்கள் ஒருவர் விராட் கோலியின் இளம் வயது படத்தினை ‘தேரே நாம்’ படத்தில் சல்மான் கானின் ராதே கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com