எந்த சவாலையும் சந்திக்க ரெடி: கோலி கூல்!

எந்த சவாலையும் சந்திக்க ரெடி: கோலி கூல்!

எந்த சவாலையும் சந்திக்க ரெடி: கோலி கூல்!
Published on

நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

புனேவில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 231 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றது. தவான் 68 ரன்களும் தினேஷ் கார்த்திக் 64 ரன்கள் எடுத்தனர். புவனேஷ்வர்குமார் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

வெற்றிக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ’ பும்ரா, புவனேஷ்வர்குமார் இருவரும் சிறப்பாக பந்துவீசினார்கள். அவர்கள்தான் எங்களின் டாப் பவுலர்கள். அதனால் எப்படி பந்துவீச வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும். பிட்ச் இன்று மெதுவாக இருந்தது. இருந்தாலும் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். தவான், பந்துகளை விளாசிய விதம் அருமையாக இருந்தது. தினேஷ் கார்த்திக்கும் நன்றாக விளையாடினார். எந்த சவாலையும் சந்திக்க எங்கள் அணி தயாராக இருக்கிறது. நாங்கள் கடந்த முறை செய்த தவறில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று பேசினோம். அதை செயல்படுத்திவிட்டோம்’ என்றார்.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது, ‘இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முந்தைய போட்டியில் நாங்கள் நன்றாக விளையாடினோம். இந்தப் போட்டி எங்களுக்கு ஒரு படிப்பினையாக அமைந்துவிட்டது. கான்பூரில் நடக்கும் போட்டியில் நன்றாக விளையாடுவோம் என்று நம்புகிறேன்’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com