“நாங்கள் உங்களை கைவிடமாட்டோம் ” - ரசிகர்களிடம் உருகிய விராட் கோலி

“நாங்கள் உங்களை கைவிடமாட்டோம் ” - ரசிகர்களிடம் உருகிய விராட் கோலி
“நாங்கள் உங்களை கைவிடமாட்டோம் ” - ரசிகர்களிடம் உருகிய விராட் கோலி

சில நேரங்களில் நாங்கள் வெற்றி பெறுகிறோம், சில நேரங்களில் கற்றுக்கொள்கிறோம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது. ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான் (29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. 

இந்நிலையில் தோல்வி தொடர்பாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள விராட் கோலி, “சில நேரங்களில் நாங்கள் வெற்றி பெறுகிறோம். மற்ற சில நேரங்களில் கற்றுக்கொள்கிறோம். நீங்கள் எப்போது எங்களை கைவிட்டதில்லை. நாங்களும் உங்களை எப்போது கைவிடமாட்டோம் என உறுதியளிக்கிறோம். அது இப்போதும்.. எப்போதும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com