முதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்

முதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்
முதல் டெஸ்ட் வெற்றி : ஒரே போட்டியால் எத்தனை சுவாரஸ்யங்கள்

டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை டாஸ் வென்ற கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.     

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒரே போட்டியின் வெற்றியால் பல்வேறு சாதனைகள் மற்றும் வரலாறுகள் நிகழ்ந்துள்ளன. அவ்வாறு நிகழ்ந்துள்ள சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.

குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அடைந்த வெற்றிகள் :

13 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி (மும்பை, 2004)

28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி (கொல்கத்தா, 1972)

31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி (அடெலாய்ட், 2018)

37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வெற்றி (ஸ்பெயின், 2002)

49 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக வெற்றி (கிங்ஸ்டான், 2006)

அஸ்வினின் ஆஸ்திரேலிய சாதனை:

ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டிகளில் முதன்முறையாக அஸ்வின் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் மெல்ர்போன் மைதானத்தில் 2014ஆம் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட் எடுத்ததே அவரது பெஸ்ட் ஆக இருந்தது. 

சேனா (SENA) தொடர்களில் இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றிகள்:

SENA (South Africa, England, New Zealand, Australia) 

நியூஸிலாந்தில், 1967
நியூஸிலாந்தில், 1975
ஆஸ்திரேலியாவில், 1986
தென் ஆப்ரிக்காவில், 2006
நியூஸிலாந்தில், 2008
தற்போது ஆஸ்திரேலியாவில், 2018

பாகிஸ்தானை தொடர்ந்து சாதனை:

ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலியாவை வென்ற இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இதற்கு முன், 1978ஆம் ஆண்டு பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

50 ஆண்டுகளுக்குப் பின் :

50 வருடங்களுக்குப் பிறகு ஒரே வருடத்தில் மூன்று முறை வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 1968ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் ஒரே வருடத்தில் 3 போட்டிகளில் வென்றுள்ளது.

வெற்றியுடன் ஒன்றிணைந்த புஜாரா :

இந்தியா இந்த வருடம் வெற்றி பெற்ற மூன்று போட்டிகளிலுமே புஜாரா 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 50 (179)

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் 72 (208)

தற்போது, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 123 (246) மற்றும் 71 (204)

விராட் கோலியின் சாதனைகள் :

ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளையும் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் வீழ்த்திய கேப்டன் என்ற சாதனை கோலி படைத்துள்ளார். ராகுல் டிராவிட் மற்றும் தோனி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளனர். ஆனால் ஆஸ்திரேலியாவை வென்றதில்லை.

டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை டாஸ் வென்ற கேப்டன் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார்.

மொத்த போட்டிகள் : 20 

டாஸ் வென்றது : 17
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com