டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி!

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி!

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி!
Published on

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி.

டி20 உலகக்கோப்பை போட்டிகள் 2007ஆம் ஆண்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 டி20 உலககோப்பைகள் நடைபெற்று, தற்போது 8ஆவது உலககோப்பை தொடர் அக்டோபரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து டி20 உலககோப்பை தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்கள்

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 1030* ரன்கள் அடித்து 1016 ரன்கள் அடித்திருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனேவை பின்னுக்கு தள்ளி, டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி. அடுத்தடுத்த இடங்களில் ஜெயவர்த்தனே (1016), கிறிஸ் கெய்ல் (965) என்று இருக்கின்றனர். தற்போது விளையாடி வரும் வீரர்களில் ரோகித் சர்மா ( 921), டேவிட் வார்னர் ( 781), ஷகிப் அல் ஹசன் ( 729), ஜொஸ் பட்லர் ( 665) ஆகியோர் உள்ளனர்.

ஜெயவர்த்தனே, கிறிஸ் கெய்ல் விட ஏன் விராட் கோலி ரன்கள் ஸ்பெசல்?

* 2007-2014 என 5 டி20 உலகக்கோப்பை தொடரில் முழுமையாக விளையாடி 31 போட்டிகளில் 1016 ரன்கள்
* 2007-2021 என 7 டி20 உலகக்கோப்பை தொடரில் முழுமையாக விளையாடி 31 போட்டிகளில் 965 ரன்கள்
* 4ஆவது இடத்தில் இருக்கும் ரோகித் சர்மா 2007-2022 வரை 8 உலககோப்பை தொடரில் பங்குபெற்று 34 போட்டிகளில் 921 ரன்கள்
* விராட் கோலி 2012-2022 வரை என 5 உலககோப்பை தொடர்களில் பங்குபெற்று 25 போட்டிகளில் 1041 ரன்கள்

வங்கதேச அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com