லதா மங்கேஷ்கர் முதல் முகமது அலி வரை... விராட் கோலி பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள்!

லதா மங்கேஷ்கர் முதல் முகமது அலி வரை... விராட் கோலி பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள்!
லதா மங்கேஷ்கர் முதல் முகமது அலி வரை... விராட் கோலி பகிர்ந்த சுவாரஸ்ய விஷயங்கள்!

இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலி, மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் குறித்து சுவாரஸ்யமான சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து ஒருநாள் தொடர்களில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவுக்கும், நியூசிலாந்து டி20 தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம்படை களம் இறக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்குப் பின், ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையே பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

`இந்திய அணி விராட் கோலியை நம்பியிருக்கும் நிலையில், அவர் இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும்’ என பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி அவருக்கு அறிவுரை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் உத்தரகாண்ட்டில் உள்ள ரிஷிகேஷுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் சென்று இருவரும் வழிபடும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சில கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமாகப் பதிலளித்துள்ளார். அதில் இடம்பெற்றிருக்கும் சில கேள்விகளும் பதில்களும் வருமாறு:

16 வயதிலிருந்த விராட் கோலிக்கு, இப்போது நீங்கள் கூறிக்கொள்ள விரும்பும் அறிவுரை என்ன?

`உலகத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் கற்றுக்கொள். இன்னும் கொஞ்சம் உன் மனதை திறந்து கொள். டெல்லியைத் தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது’ என்பது.

உங்கள் மகிழ்ச்சியான இடம் எது? அல்லது எங்கே?

என் மகிழ்ச்சியான இடம் வீடு.

உங்களின் இரவு உணவை, வரலாற்று சிறப்புமிக்க ஒரு பெண்ணுடன் இணைந்து சாப்பிடலாம் என்றால் நீங்கள் அழைத்துச் செல்ல விரும்பும் பெண் யார்?

என் வாழ்வில் லதாஜியை (கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த லதா மங்கேஷ்கர், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது) சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. எனவே, அவரது வாழ்க்கை மற்றும் பயணத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொள்வது ஆச்சரியமாக இருந்திருக்கும். ஆகவே அவருடன் செல்வேன்.

ஒரு தீவில் சிக்கிக்கொண்டீர்கள் என வைத்துக்கொள்வோம். குடும்பத்தைத் தவிர, அங்கு வேறு ஒரேயொரு நபர் இருக்கலாம் என்றால், அது யார்?

குடும்பம் தவிர என்றால்… முகமது அலி.

நீங்கள் பின்பற்றிய விசித்திரமான டயட் என்றால், அது எது?

24 - 25 வயது வரையில் நான் பின்பற்றியது விசித்திரமான டயட் தான். உலகிலுள்ள எல்லா துரித உணவுகளையும் சாப்பிட்டு வந்தேன். என்னை பொறுத்தவரை இதுதான் விசித்திரமானது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com