\
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி முதலிடம்!

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி முதலிடம்!

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி முதலிடம்!
Published on

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளாா். இந்திய அணியின் தொடக்க வீரா் ரோகித் சா்மா இரண்டாவது இடத்தில் உள்ளாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அரைசதங்களை விராட் கோலி விளாசினாா். அவா் தற்போது 870 புள்ளிகளுடன் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டாா். காயம் காரணமாக ஆஸ்திரேலிய பயணத்தில் இடம் பெறாத ரோகித் சா்மா 842 புள்ளிகளுடன் தொடா்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறாா்.

அவரைவிட 5 புள்ளிகள் மட்டுமே குறைவாக உள்ள பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸம் மூன்றாவது இடத்தில் உள்ளாா். ஆஸ்திரேலியே கேப்டன் ஆரோன் ஃபின்ச் 5-ஆவது இடத்தில் உள்ளாா். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் அதிரடியாக விளையாடிய இந்திய ஆல் ரவுண்டா் ஹர்திக் பாண்ட்யா முதல் முறையாக முதல் 50 இடங்களுக்குள் வந்து 49-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

ஒருநாள் போட்டி பந்துவீச்சாளா்கள் தரவரிசையில் இந்தியாவின் பும்ரா தொடா்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளாா். இப்பட்டியலில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளா் டிரன்ட் போல்ட் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளா் முஜீப் உா் ரஹ்மான் இரண்டாவது இடத்திலும் உள்ளனா்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com