சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ

சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ
சமந்தாவின் ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய விராட் கோலி - வைரலாகும் வீடியோ

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆர்சிபி அணி வீரருமான விராட் கோலி, சமந்தாவின் ‘ஊ சொல்றியா...’ மாமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ரன் மிஷின், கிங் கோலி என்று அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக் கோப்பை, 50-வது ஓவர் உலகக் கோப்பை, ஐபிஎல் போட்டி என எதிலும் கோப்பை வெல்லாததை அடுத்து விமர்சனத்துக்குள்ளானார். இதனால் கேப்டன் பதவியிலிருந்து விலகியநிலையில், தற்போது 15-வது சீசன் ஐபிஎல் போட்டியிலும் தொடர்ந்து டக் அவுட்டாகி அதிர்ச்சியடைய வைத்து வருகிறார்.

கடந்த 100 போட்டிக்கும் மேலாக சதம் அடிக்காதநிலையில், 2 வருடங்களாக பார்மில் இல்லாமல் தடுமாறி வருகிறார். இதனைத்தொடர்ந்து பெங்களூரு அணி நன்மைக்காக அவர், அணியிலிருந்து விலக வேண்டும் என்றும், அவருக்கு தற்போது சிறிதுகாலம் ஓய்வுத்தான் தேவை என்றும் கிரிக்கெட் விமர்சர்கள், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், 'விராட் கோலியின் வாழ்க்கைக்கு கெட்ட நேரத்தை கொண்டு வந்துவிட்டார் அனுஷ்கா சர்மா'' என சர்ச்சைக்குரிய வகையில் பாலிவுட் நடிகர் கேஆர்கே விமர்சித்தது விவாதப்பொருளானது.

இந்நிலையில், ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா...’ பாடலுக்கு, விராட் கோலி நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல் தற்போது ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இவர், தமிழ் குடும்பத்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த பெண்ணான வினி ராமனை நீண்ட நாளாக காதலித்து வந்தநிலையில், கடந்த மாதம் அவரை கரம்பிடித்தார். இதனால், இந்த சீசனின் முதல் சில போட்டிகளில் கலந்துகொள்ளாதநிலையில், தற்போது அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.

இதையடுத்து ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரும், புதுமாப்பிள்ளையுமான கிளென் மேக்ஸ்வெல்லுக்கு, அந்த அணியின் நிர்வாகம் வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் அந்த அணி வீரர்கள் தினேஷ் கார்த்திக், விராட் கோலி உள்பட பலரும் சமந்தாவின் ‘ஊ சொல்றியா..’ , ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் பாடலுக்கு நடனமாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது. விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கலந்துகொண்ட நிலையில், இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இதேபோல், சென்னை அணி வீரரான கான்வேக்கு திருமணத்திற்கு முந்தைய பார்ட்டியில் அந்த அணி வீரர்களான தோனி, பிராவோ, ருதுராஜ் ஆகியோர், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் டூ... டூ... டூ... பாடலுக்கு நடனமாடியது குறிப்பிடத்தக்கது. 

<iframe width="683" height="384" src="https://www.youtube.com/embed/PfvpPPglMhU" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com