என்னை அணியில் சேர்க்க லஞ்சம் கேட்டார்கள்.. என் தந்தை மறுத்துவிட்டார் - விராட் கோலி
தன்னுடைய தந்தை குறித்து பல நெகிழ்ச்சியான நினைவுகளை விராட் கோலி பகிர்ந்து கொண்டுள்ளார்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரியுடன் இன்ஸ்டாகிராமில் நேரலையில் உரையாடினார். இந்த உரையாடலில் பல்வேறு விஷயங்களை கோலி பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தன்னுடைய இளைமைக்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் தன்னுடைய தந்தை குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
அதில், என்னுடைய தந்தை தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்தார். தன்னை ஒரு வழக்கறிஞராக உயர்த்திக் கொண்டார்.குறுக்குவழியில் வெற்றி பெறுவதை அவர் எப்போதும் விரும்பமாட்டார். கடின உழைப்பு குறித்துதான் எப்போதுமே போதிப்பார். சிறு வயதில் நான் ஒருமுறை அணிக்கு தேர்வாகவில்லை.லஞ்சம் கொடுத்து அணிக்கு தேர்வாகிவிடலாம் என பயிற்சியாளர் கூறினார். அவன் திறமையாக விளையாடினால் மட்டுமே முடியும். அவனுக்காக நாம் ஒன்றும் செய்ய முடியாது. என்று கூறினார்.
அது தான் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தது. நீங்கள் முன்னேற விரும்பினால் வேறு யாரும் செய்யாத ஒன்றைச் செய்யுங்கள். உங்களது கடின உழைப்பை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டும் என்பதை தன் வாழ்க்கை மூலமே என் தந்தை எனக்கு போதித்தார்.அவர் வாழ்ந்த விதமே எனக்கான வாழ்க்கைப் பாடம் என தெரிவித்தார்.