எல்லா புகழும் தோனிக்கே: விராத் கோலி

எல்லா புகழும் தோனிக்கே: விராத் கோலி

எல்லா புகழும் தோனிக்கே: விராத் கோலி
Published on

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியின்போது, இக்கட்டான சூழலில் முக்கிய முடிவெடுக்க தோனியே காரணம் என விராத் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்திருந்தாலும், தொடக்கத்தில் அந்த அணியின் ஆட்டம் சிறப்பாகத் தான் இருந்தது.

28 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்திருந்தது பங்களாதேஷ். அந்த நேரத்தில் தமிம் இக்பால் மற்றும் முஷ்பிகுர் ரஹிம் கூட்டணி இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. இவர்களை பிரிக்க முடியாமல் இந்திய அணி தவித்தது. அப்போது திடீரென பந்துவீச அழைக்கப்பட்டார் கேதர் ஜாதவ். இவர் முஷிபிகுர் ரஹிம், தமிம் இக்பால் இருவரது விக்கெட்டையும் வீழ்த்தி இந்திய அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் பின்தான் பங்களாதேஷுக்கு தடுமாற்றம் தொடங்கியது.

இந்நிலையில் கேதர் ஜாதவ் களமிறக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த கேப்டன் விராத் கோலி, இந்த முடிவுக்கு தோனி தான் காரணம் என கூறியுள்ளார். இக்கட்டான சமயத்தில் யாரை பந்துவீச அழைக்கலாம் என தோனியிடம் கருத்து கேட்டதாகவும் அவரே கேதர் ஜாதவை பரிந்துரைத்தாகவும் கூறியுள்ளார். பின் இருவரும் இணைந்து முடிவடுத்து அவரை பந்துவீச வைத்ததாகவும் கோலி கூறியுள்ளார். யாதவ் ஸ்மார்ட் கிரிக்கெட்டர் என்றும் தனது திட்டத்தை போட்டியில் சரியாக செயல்படுத்தியதாகவும் புகழாரம் சூட்டியுள்ளார் கோலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com