ஊனமுற்ற நாய்களைத் தத்தெடுத்த விராட் கோலி

ஊனமுற்ற நாய்களைத் தத்தெடுத்த விராட் கோலி
ஊனமுற்ற நாய்களைத் தத்தெடுத்த விராட் கோலி

பெங்களூருவில் உள்ள செல்லப்பிராணிகள் பாதுகாப்பு மையம் ஒன்றில் கேப்டன் விராட் கோலி ஊனமுற்ற நாய்களைத் தத்தெடுத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளையாட்டில் மிக ஆக்ரோஷமான வீரர், அனைத்து வீரர்களிடமும் கடுமையாக நடந்துகொள்வார் என பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால் விராட் கோலி மனிதர்கள் மட்டுமின்றி செல்ல பிராணிகளின் மீதும் பாசம் காட்டும் குணமும் உள்ளது.

கேப்டன் விராட் கடந்த 16 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள செல்லப்பிராணிகள் பாதுகாப்பு மையம் ஒன்றுக்குச் சென்று அங்குள்ள செல்லப்பிராணிகளுடன் விளையாடி மகிழ்ந்தார். அது மட்டுமில்லாமல் 15 ஊனமுற்ற நாய்களையும் தத்தெடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து அந்த மையத்தின் நிறுவனர் சுதா நாராயணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், விராட் கோலி எங்கள் மையத்துக்கு வந்ததை என்னால் நம்ப முடியவில்லை. மையத்தில் பல வகை பிராணிகள் இருந்த போதிலும் ஊனமுற்ற நாய்களை தத்தெடுத்துச் சென்றது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com