இந்திய மல்யுத்த வீரர் காளீ என்கிற தலீப் சிங் ராணாவை, நண்பர்கள் தினத்தன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி சந்தித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்று நேற்று சாதனை படைத்தது இந்திய கிரிக்கெட் அணி. போட்டி விரைவில் முடிந்துவிட்டதால் அறைக்கு திரும்பிய கோலி, இந்திய மல்யுத்த வீரர் காளீயை சந்தித்துள்ளார்.
நண்பர்கள் தினமான நேற்று அவரை சந்தித்த கோலி, டெஸ்டாரெண்டில் அவருடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மற்றொரு படத்தில் ஏழு அடி உயரமுள்ள காளீயுடன் அவர் நிற்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
‘பெருமைக்குரிய காளியை சந்தித்ததில் பெருமை’ என்று குறிப்பிட்டுள்ள கோலியின் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.