ஜூனியர் கிரிக்கெட் டீமுக்கு விராத் கோலி அட்வைஸ்!

ஜூனியர் கிரிக்கெட் டீமுக்கு விராத் கோலி அட்வைஸ்!

ஜூனியர் கிரிக்கெட் டீமுக்கு விராத் கோலி அட்வைஸ்!
Published on

இந்திய ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் அணியுடன் உரையாடிய விராத் கோலி அவர்களுக்கு டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை போட்டி, ஜனவரி 13 ஆம் தேதி நியூசிலாந்தில் தொடங்குகிறது. மும்பை பேட்ஸ்மேன் பிருத்வி ஷா தலைமையிலான இந்திய அணி இதற்காக நேற்று நியூசிலாந்து புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இளம் வீரர்களிடம் பேசுமாறு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியிடம் சொன்னார். 

இதையடுத்து அந்த வீரர்களை சந்தித்த விராத் கோலி, அவர்களிடம் சிறிது நேரம் பேசினார். 2008-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்றவர் விராத் கோலி. தனது அனுபவத்தை அவர்களிடம் தெரிவித்த அவர், டிப்ஸ்களை வழங்கினார்.

‘டிவியில் போட்டியை மக்கள் பார்ப்பார்கள் என்பதால் பொறுப்புடன் விளையாட வேண்டும். இது உங்களுக்கு கிடைத்திருக்கிற பெரிய வாய்ப்பு. அதை சரியாக பயன்படுத்தி விளையாடுங்கள். அதே நேரம் இதை நெருக்கடியாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. ரசித்து ஆட வேண்டும்’ என்று அறிவுரை கூறினார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபற்றி விராத் கோலி கூறும்போது, ‘19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டன் பிருத்வி ஷா பற்றி கேள்விபட்டிருக்கிறேன். முதல் தர கிரிக்கெட்டில் அவர் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவர் அணியை சிறப்பாக வழி நடத்துவார்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com