'இளைஞர்களே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' விராட் கோலி அட்வைஸ் !

'இளைஞர்களே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' விராட் கோலி அட்வைஸ் !

'இளைஞர்களே வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்' விராட் கோலி அட்வைஸ் !
Published on

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்தத் டெஸ்ட் தொடரில் ஷிகர் தவாண், ரோகித் சர்மா உள்ளிட்ட பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆசியக் கோப்பை தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ப்ரித்வி ஷா, ஹனுமா விஹாரி மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஹனுமா விஹாரி ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியவர். எனவே நாளை நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் ப்ரித்வி ஷா மற்றும் மயாங்க் அகர்வால் ஆகிய இருவருமே களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று ராஜ்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் அதில் அவர் "ஹனுமா விஹாரி, ப்ரித்வி ஷா மற்றும் மயாங்க் அகர்வால் ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளனர். அதற்காகத்தான் இம்மூவரும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மூவரும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக விளையாட வேண்டும். இதனை ஒரு நிர்பந்தமாக நினைக்க கூடாது. இது ஒரு மகத்தான வாய்ப்பு, சிறப்பாக விளையாடினால் தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கும், பின்பு இந்திய அணியில் நிலையாக இடம் பிடிப்பார்கள்" என்றார் கோலி.

இது குறித்து தொடர்ந்த கோலி "இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வரலாற்றில் இடம் பிடிப்போம். அறிமுக வீரர்கள் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி தங்களது திறமைகளை வெளிப்படுத்துவர். இது அவர்கள் வாழ்வின் முக்கியத் தருணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்றார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com