‘நயா போஸ்ட் சுந்தர் தோஸ்த்’ - வைரலான கோலியின் ஜாலி புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மிக வேடிக்கையான புகைப்படம் ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தற்போது நியூசிலாந்தில் இருக்கும் விராட் கோலி, தனது அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் இளம் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட ஒரு படத்தை ட்வீட் செய்துள்ளார். ஆட்டக் களத்திலிருந்து விலகி இருக்கும்போது விராட் கோலி, ட்விட்டரில் ஆர்வமாக பல தகவல்களை வெளியிடுவார். அந்தத் தகவல்கள் அவரைப் பின் தொடர்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருக்கும். இது வாடிக்கை நடப்பதுதான்.
ஆகவே கோலியின் ரசிகர்கள் எப்போதுமே அவரது ட்விட்டர் பக்கத்தில் ஏதாவது ஒரு புதிய பதிவுகள் இருக்கிறதா? எனத் தேடிக்கொண்டே இருப்பர். மேலும் ரன் மிஷின் கோலி ஏதாவது புதிய படங்களை, வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றினால் போது உடனே அதை அதிகமாகப் பகிர்ந்து வைரலாக்கி விடுவர்.
தற்போது கோலி ட்விட்டரில் புதிய நையாண்டித்தனமான படம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியுடன் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி மற்றும் பிரித்வீ ஷா ஆகியோர் உள்ளனர்.
இந்தப் படத்தை பார்க்கவே படு ஜாலியாக இருக்கிறது. ஏனெனில் அப்படத்தில் உள்ள மூவரும் வித்தியாசமான முகபாவனைகளை செய்து காட்டுகின்றனர். ‘நயா போஸ்ட் சுந்தர் தோஸ்த்’ என அதற்கு கோலி தலைப்பிட்டுள்ளார்.