ஆர்சிபி அணி முகாமில் இணைந்தார் கேப்டன் விராட் கோலி!

ஆர்சிபி அணி முகாமில் இணைந்தார் கேப்டன் விராட் கோலி!
ஆர்சிபி அணி முகாமில் இணைந்தார் கேப்டன் விராட் கோலி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முகாமில் இணைந்தார் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி. ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பாதி ஆட்டங்கள் நாளை முதல் ஆரம்பமாகின்றன. இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து துபாய் திரும்பிய கோலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலின் படி ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். அந்த ஆறு நாட்கள் நிறைவடைந்தவுடன் RCB-யில் அவர் இணைந்துள்ளார். 

அவருடன் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மற்றொரு RCB வீரர் முகமது சிராஜும் அணியில் இணைந்துள்ளார். 

நடப்பு சீசனுக்கான புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள பெங்களூர் அணி. முதல் முறையாக கோப்பையை வெல்லும் நோக்கில் பெங்களூர் வீரர்கள் இந்த சீசனை அணுகி உள்ளனர். 

மேலும் பெங்களூர் அணி நீல நிறத்திலான புதிய ஜெர்ஸியில் களம் இறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சிகப்பு மற்றும் பச்சை நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து அந்த அணி விளையாடி உள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com