அனுஷ்காவுக்கு கோலி ‘லிப் லாக்’: வைரல் போட்டோ

அனுஷ்காவுக்கு கோலி ‘லிப் லாக்’: வைரல் போட்டோ
அனுஷ்காவுக்கு கோலி ‘லிப் லாக்’: வைரல் போட்டோ


இந்திய கிரிக்கெட் வீரர் கோலி தனது காதல் மனைவி அனுஷ்காவுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணத்திற்கு பின் கேப்டவுண் கடற்கரையில்  எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில்  வெளியிட்ட கோலி, கேப்டவுண் அழகான இடம், அனுஷ்காவுடன் இருக்கும்போது இன்னும் அழகாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

அதன்பின்னர் தென்னாப்பிரிக்க தொடரில் கோலி பிசியாக, அனுஷ்காவும் தனது ‘பரி’ படத்திற்கான வேலையில் மூழ்கினார். கடந்தாண்டு காதலர் தினத்தை அனுஷ்காவுடன் கொண்டாடினார். ஆனால் இந்தாண்டு இவர்கள் இருவரும் பிசியாகிவிட்டனர். இந்நிலையில் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக இன்ஸ்ட்ராகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அனுஷ்காவை கட்டியணைத்தது ‘லிப் லாக்’ கொடுக்கும் அந்தப் படத்தில் ‘மை ஓன் அண்ட் ஓன்லி’ என்ற வாசகத்தையும் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது. காதல் பறவைகளுக்கு வாழ்த்துகள் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com