தோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி

தோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி

தோனியின் சாதனையை நானும் நிகழ்த்துவேன் - விராட் கோலி
Published on

12 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணியின் கேப்டனாக மகேந்திரசிங் தோனி நிகழ்த்திய சாதனையை தானும் நிகழ்த்துவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். 

2007 ஆம் ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டிலேயே தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. அதன்பின்னர் நடந்த இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியால் இறுதிப்போட்டி வரை முன்னேறினாலும் கோப்பையை வெல்ல இயலவில்லை.

இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள இருபது ஓவர் கோப்பையை கைப்பற்றி, தோனிக்கு அடுத்து இருபது ஓவர் உலக்கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை படைக்கும் நம்பிக்கை உள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com