\
டி20 தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடம்

டி20 தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடம்

டி20 தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி முதலிடம்
Published on

உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி. இப்பொழுது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான சர்வதேச பேட்ஸ்மேன்கள்
தரநிலைப் பட்டியலில் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலியாவின் ஆரன் பின்ச் இரண்டாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ்ஸின் எவின் லீவிஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர் தரநிலையில் ஜஸ்பிரித் பும்ரா இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் முதலிடத்தில் உள்ளார்.

சமீபத்தில் பல கோடி ரூபாய் கொடுத்து விராட் கோலியை குளிர்பான விளம்பரத்தில் நடிக்க அழைத்திருந்தது ஒரு நிறுவனம். அந்த
வாய்ப்பு வேண்டாம் அவர் என்று நிராகரித்திருந்தார். காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்கள் எதையும் அருந்துவதில்லை என்றும், ஆகவே
அவ்வாறான விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பை தவிர்த்தேன் என்றும் கோலி கூறியிருந்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com