விராத் கோலிக்கு வெள்ள நிவாரணத்திலிருந்து ரூ 47 லட்சம்?

விராத் கோலிக்கு வெள்ள நிவாரணத்திலிருந்து ரூ 47 லட்சம்?

விராத் கோலிக்கு வெள்ள நிவாரணத்திலிருந்து ரூ 47 லட்சம்?
Published on

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலிக்கு உத்தரகண்ட் அரசு 2013 கேதார்நாத் வெள்ள நிவாரண நிதியில் இருந்து ரூ 47 லட்சம் கொடுத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

விராத் கோலி உத்தரகண்ட் சுற்றுலா துறையின் ஒரு நிமிட விளம்பர வீடியோவில் இடம்பெற்றிருந்தார். அதற்காக அவருக்கு 2015-ம் ஆண்டு கேதார்நாத் வெள்ள நிவாரணத்திலிருந்து ரூ 47 லட்சம் கொடுக்கப்பட்டது என தகவல் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் கண்டறிந்துள்ளார். அந்த நேரத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் நல்லெண்ணத் தூதுவராக கோலி இருந்தார்.

இது குறித்து விளக்கம் தெரிவித்த உத்தரகண்ட் முதல்வரின் ஊடக ஆலோசகர் சுரேந்திர குமார், தனது மாநிலத்திற்கு சுற்றுலாத்துறை மிக முக்கயமானது எனவும் அதன் விளம்பரத்திற்காக செலவு செய்வது தவறில்லை என்றும் கூறினார்.

மேலும் அவர், இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை எனவும் கேதார்நாதின் வளர்ச்சிதான் அரசாங்கத்தின் முன்னுரிமை என்று மக்கள் அறிவார்கள் எனவும் தெரிவித்தார்.

ஆனால் விராத் கோலி தரப்பில் உத்தரகண்ட் அரசுக்கும் தங்களுக்கும் எந்த பண பரிமாற்றமும் நடைபெறவில்லை என கூறியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com