ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவர், பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 873 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், 861 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், முதல் பத்து இடங்களுக்குள் இந்திய வீரர் ஓருவர் கூடஇல்லை. அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 13ஆவது இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் முதலிடத்தில் உள்ளார். அணிகளுக்கான தரவரிசையில் 119 புள்ளிகளுடன் தென்னாப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், 114 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.