விராத் கோலியால் எதையும் சாதிக்க முடியும்: கணிக்கிறார் காலிஸ்

விராத் கோலியால் எதையும் சாதிக்க முடியும்: கணிக்கிறார் காலிஸ்

விராத் கோலியால் எதையும் சாதிக்க முடியும்: கணிக்கிறார் காலிஸ்
Published on

இதே போன்று சரியான உடல் தகுதியுடன் இருந்தால் விராத் கோலியால் கிரிக்கெட்டில் எதையும் சாதிக்க முடியும் என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் காலிஸ் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின், காயத்துக்குப் பிறகு அணிக்குத் திரும்பி இருக்கிறார். அவர் எப்படி விக்கெட் எடுக்க போகிறார் என்பது பிட்ச்-சின் தன்மையை பொறுத்து அமையும். ஆனாலும் எந்த அணிக்கு ஆடினாலும் அவர் அந்த அணியின் ஆக்ரோஷமான சொத்து. இந்திய அணியிலும் திறமையான பவுலிங் வரிசை இருக்கிறது.

இந்திய மைதானங்களை விட, தென்னாப்பிரிக்க சீதோஷ்ண நிலை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவே இருக்கும். அதனால் இந்தப் போட்டியும் இந்த தொடரும் சுவாரஸ்யமானதாக இருக்கும். இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமியும் புவனேஸ்வர்குமாரும் சூழ்நிலைக்குத் தக்கபடி தங்களை மாற்றிக்கொண்டு பந்துவீசுபவர்கள். அதனால் தென்னாப்பிரிக்க சூழலுக்கு ஏற்ப விரைவிலேயே தங்களை மாற்றிக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். சரியான ஏரியாவில் பந்துவீசுவதை அவர்கள் தெரிந்துகொண்டால் அது பயனுள்ளதாக இருக்கும்.

ஐபிஎல் தொடக்கத்தில் பெங்களூர் அணியில் விராத் கோலியுடன் விளையாடி இருக்கிறேன். அப்போதே அவர் முக்கியமான வீரராக வருவார் என நினைத்தேன். இப்போதைய உடல் தகுதியுடனும் ரன்களை குவிக்க வேண்டும் என்ற வேகத்துடனும் அவர் தொடர்ந்து இருந்தால் கண்டிப்பாக அவரால் கிரிக்கெட்டில் சாதிக்க முடியும்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com