இன்ஸ்டாவில் நரேந்திர மோடியை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி...!

இன்ஸ்டாவில் நரேந்திர மோடியை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி...!
இன்ஸ்டாவில் நரேந்திர மோடியை பின்னுக்குத் தள்ளிய விராட் கோலி...!

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் 50 மில்லியன் (5 கோடி) மக்கள் பின்தொடர்கின்றனர். இந்தியர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் இவ்வளவு ஃபாலோயர்களை பெற்றுள்ளது இதுவே முதன்முறை.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலியும் ஒருவர். இவர்., தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிடுவது வழக்கம். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 5 கோடி மக்கள் பின் தொடரும் இந்தியர் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது.

இவருக்கு அடுத்தப்படியாக பிரியங்கா சோப்ரா 49 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். தீபிகா படுகோனே 44 மில்லியன் ஃபாலோயர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளதாகத் தெரிகிறது. இப்பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 34.5 மில்லியன் ஃபாலோயர்களுடன், இன்ஸ்டாகிராமில் எட்டாம் இடத்தில் உள்ளார்.

View this post on Instagram

?

A post shared by Virat Kohli (@virat.kohli) on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com