மிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை

மிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை

மிஸ்பாவை பின்னுக்கு தள்ளினார் விராட் - கேப்டனாக புதிய சாதனை
Published on

ஆசியநாடுகளில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து விளையாடிய அந்த அணி மேற்கொண்டு 16 ரன்கள் சேர்ப்பதற்குள் மீதமுள்ள 3 விக்கெட்டுகளையும் இழந்தது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி 311 குவித்து ஆட்டமிழக்க, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. கே.எல்.ராகுல் 4, புஜாரா 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். பிரித்வி ஷா தனது அதிரடியால் மிரட்டி ஒரு சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 53 பந்தில் 70 ரன் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராட் கோலி 45 ரன் எடுத்து அவுட் ஆனார். ரகானே(54), ரிஷப் பண்ட்(59) அரைசதம் அடித்து விளையாடி வருகின்றனர். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்துள்ளது. 

இந்தப் போட்டியில் 45 ரன்கள் அடித்ததன் மூலம் ஒரு கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 4222 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 65.96. ஆசிய நாடுகளின் கேப்டன்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். 4214 ரன்களுடன் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா இருந்தநிலையில், அவரை விராட் கோலி பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த வரிசையில், ஜெயவர்த்தனே (3665), தோனி (3454), கவாஸ்கர் (3449) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், தென்னாப்பிரிக்கா அணியின் கிரிம் ஸ்மித் 8659 ரன்கள் குவித்து சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 8வது இடத்தில் உள்ளார். ஆலன் பார்டர் (6623), ரிக்கி பாண்டிங் (6542), கிளிவ் லியாட் (5233), ஸ்டீபன் பிளமிங் (5156), அலெஸ்டர் குக் (4844), பிரையன் லாரா (4685) உள்ளிட்டோர் முதல் 7 இடங்களில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com