“எங்க ரிவிவ்யூ என்னாச்சு” நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்ட கோலி

“எங்க ரிவிவ்யூ என்னாச்சு” நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்ட கோலி

“எங்க ரிவிவ்யூ என்னாச்சு” நடுவரிடம் ஆக்ரோஷமாக முறையிட்ட கோலி
Published on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் நடுவரிடம் விராட் கோலி விக்கெட் கேட்டு முறையிட்டது வைரலாகி உள்ளது.

இந்தியா - ஆப்கான் அணிக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். கேதர் ஜாதவ் 52 ரன் எடுத்தார். ஆப்கான் வீரர்கள் அபாரமாக பந்துவீசினர். நெய்ப், நபி தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். 

இதனையடுத்து, 225 ரன்கள் என்ற இலக்குடன் ஆப்கான் விளையாடி வருகிறது. இதில், மூன்றாவது ஓவரை சமி வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை ஸஸாய் எதிர் கொண்டார்.

சமி வீசிய பந்து அவரது பேடில் பட்டது. உடனே அவர் எல்.பி.டபிள்யூ கேட்டார். எல்லா வீரர்களும் உரக்க கத்தினர். ஆனால், நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

உடனே, கேப்டன் விராட் கோலி ரிவிவ்யூ கேட்டார். முதலில் பந்து பேட்டில் படாமல் பேடில் மட்டும் பட்டு சென்றது உறுதியானது.

ஆனால், பந்து நடுகளத்திற்கு சற்று வெளியே பட்டதால் விக்கெட் இல்லையென மூன்றாம் நடுவர் அறிவித்தார். பந்து சரியாக லைனில் பாதி பாதி பட்டிருந்தது. அதேபோல், இந்திய அணியின் ரிவிஸ்-ம் இழந்ததாக அறிவித்தார். 

இதனால், அதிருப்தி அடைந்த கேப்டன் விராட் கோலி ரிவிஸ் இழந்தது குறித்து நடுவரிடம் முறையிட்டார். நடுவர் அவருக்கு விளக்கத்தை அளித்தார்.

ஆனால், விராட் கோலி நடுவரை விடுவதாய் இல்லை. மீண்டும் மீண்டும் ஆக்ரோஷமாக நடுவரிடம் அவர் பேசினார். 

விராட் கோலி நடுவரிடம் முறையிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

பலரும் இந்தப் படத்தை பதிவிட்டு பள்ளி, கல்லூரியில் ஆசிரியரிடம் மாணவர்கள் முறையிடுவதுபோல் உள்ளது என கிண்டல் செய்தனர்.

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 40 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து விளையாடி வருகிறது. இன்னும், 60 பந்துகளில் அந்த அணி 68 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com