பிரதமர் மோடி வாழ்த்தில் மகிழ்ந்த கோலி- அனுஷ்கா

பிரதமர் மோடி வாழ்த்தில் மகிழ்ந்த கோலி- அனுஷ்கா

பிரதமர் மோடி வாழ்த்தில் மகிழ்ந்த கோலி- அனுஷ்கா
Published on

கிரிக்கெட் வீரர் விராட் கோலி - நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் கோலாகலமாக நடைபெற்றது. 

விராத் கோலியும் அனுஷ்கா சர்மாவும் காதலித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் இவர்கள்  இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் உள்ள சொகுசு விடுதியில் நேற்று நடந்தது. இதில் 
பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு புதுமணத் தம்பதிக்கு பரிசு வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர்.

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலும் பங்கேற்று வாழ்த்தினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சில மிக முக்கிய நபர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாக மும்பையில் வரும் 26ஆம் தேதி மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

அன்றைய தினம் விராட் - அனுஷ்கா தம்பதியின் நண்பர்கள், தோழிகள் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com