\
வைரலாகும் கோலி, அனுஷ்கா புகைப்படம்!

வைரலாகும் கோலி, அனுஷ்கா புகைப்படம்!

வைரலாகும் கோலி, அனுஷ்கா புகைப்படம்!
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர்.

விழாக்கள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு இருவரும் ஒன்றாக சென்று வருகின்றனர். வெளிநாட்டு போட்டிகளில் விளையாட விராத் சென்றால் அனுஷ்காவும் அங்கு சென்றுவிடுகிறார். இருவரும் ஒன்றாக சுற்றுவது போலான புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பும்.

இந்நிலையில் அனுஷ்காவும் விராத் கோலியும் விளம்பர படம் ஒன்றில் சேர்ந்து நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. இதில் கோலியும் அனுஷ்காவும் ஒருவரை ஒருவர் காதலோடு பார்த்துக்கொள்வது போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. இந்தப் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com