மும்பையை கலக்கிய விராட்-அனுஷ்கா வரவேற்பு நிகழ்ச்சி
மும்பையில் நடைபெற்ற விராட் கோலி, அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட், கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த டிசம்பர் 11-ம் தேதி இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து கடந்த டிசம்பர் 21-ம் தேதி டெல்லியில் உள்ள தாஜ் தர்பார் ஹாலில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 1000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.
இதனையடுத்து, மும்பையில் உள்ள செயிண்ட் ரெஹிஸ் ஹோட்டலில் பிரம்மாண்ட மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விராட்-அனுஷ்கா தம்பதிகள் புதிய ஆடைகளில் விருந்தினர்களை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன், ஷாருகான், கேத்ரினா கைஃப், ரன்பீர் கப்பூர் உள்ளிட்ட பல பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
அதேபோல், சச்சின், தோனி, ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்களும் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினர். விராட்-அனுஷ்கா தம்பதிகள் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்து தென் ஆப்பிரிக்கா செல்கின்றனர்.