கொரோனா தடுப்பு பணி: விராட் கோலி, அனுஷ்கா தம்பதி ரூ.2 கோடி நிதியுதவி!
இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா தம்பதியினர் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளனர்.
இது குறித்து அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அதில் "நம்முடைய நாடு கொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்த்து போராடி வருகிறது. நம்முடைய மருத்துவ கட்டமைப்பு மிகப்பெரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. மக்கள் அவதியுறுவதை பார்க்கும்போது பெரும் துயரமாக இருக்கிறது. இதனால் நானும் விராட் கோலியும் இணைந்து கொரோனா தடுப்பு பணிக்காக நிதி திரட்டும் இயக்கத்தை தொடங்குகிறோம்"
மேலும் " #InThisTogether என்ற ஹாஷ்டேக் மூலம் 'கெட்டோ' தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிதி திரட்டுகிறோம். இந்த கடிமான காலத்தை நாம் எல்லோரும் இணைந்து எதிர்கொள்வோம். இந்தியர்களான நாம் இந்தியர்களுக்காக துணை நிற்போம். உங்களுடைய சிறு பங்களிப்பு இந்த கடினமான காலத்தை எதிர்கொள்வதற்கு உதவும்" என கோரிக்கை வைத்துள்ளனர்.