'ரிக்கி பாண்டிங் போலவே விராட் கோலி' - பிரட் லீயின் பார்வை!

'ரிக்கி பாண்டிங் போலவே விராட் கோலி' - பிரட் லீயின் பார்வை!
'ரிக்கி பாண்டிங் போலவே விராட் கோலி' - பிரட் லீயின் பார்வை!

அணியைத் தலைமை தாங்குவதில் ரிக்கி பாண்டிங்கை போலவே விராட் கோலி இருப்பதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரட்லீ தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிவேக பந்துவீச்சுக்கு பிரபலமானவர் பிரட்லீ. தற்போது ஓய்வு பெற்றுவிட்ட இவர், இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி குறித்து பேசியுள்ளார். அவர் விராட் கோலியை ரிக்கி பாண்டிங்குடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். அணியைத் தலைமை தாங்குவதில் இருவரிடமும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், விராட் கோலி, ரிக்கி பாண்டிங் இருவருமே தைரியமான மனநிலையில் இருப்பார்கள்.

சில நேரங்களில் அவர்கள் எடுக்கும் ரிஸ்க் அணியின் வெற்றி தோல்வியை மாற்றி அமைக்கும். இருவருமே மகிழ்ச்சியுடன் பொறுப்பை ஏற்று நடத்துவார்கள். தோனியிடம் இருந்து பொறுப்பை பெற்ற கோலி சிறப்பாகவே செயல்பட்டார். கேப்டன் பதவி மட்டுமல்ல, பேட்டிங் திறமையிலும் விராட் கோலி-ரிக்கி பாண்டிங்கிடம் ஒற்றுமை உள்ளது. சகவீரர்களை சரியாக புரிந்துகொண்டு களத்தில் பயன்படுத்திக் கொள்வதிலும் ரிக்கி பாண்டிங் சிறந்தவர். அதுவும் விராட் கோலியிடம் நான் பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com