பாக்., போட்டியில் மேட்ச் பிக்சிங்: விராத் கோலி, யுவராஜ் சிங் மீது மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

பாக்., போட்டியில் மேட்ச் பிக்சிங்: விராத் கோலி, யுவராஜ் சிங் மீது மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!

பாக்., போட்டியில் மேட்ச் பிக்சிங்: விராத் கோலி, யுவராஜ் சிங் மீது மத்திய அமைச்சர் பகீர் குற்றச்சாட்டு!
Published on

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் யோர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார்.

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதனாத்தில் கடந்த ஜூன் 18ல் நடந்தது. இதில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். அவர் பேசும்போது "இந்தியா வென்றாக வேண்டிய சூழலில் உள்ள போட்டிகளில் கேப்டன் விராத் கோலி சதமடித்து சிறப்பாக விளையாடியிருக்கிறார். அதேபோல், மூத்த வீரரான யுவராஜ் சிங்கும் கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே கொடுத்திருக்கிறார். அப்படியிருக்க இறுதிப்போட்டியில் மட்டும் சரியாக விளையாடாமல் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது ஏன்?. எனில், அந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதா?. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com