ஷாகித் அஃப்ரிடி தொண்டு நிறுவனத்துக்கு பேட் பரிசளித்த விராத் கோலி
பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடியின் தொண்டு நிறுவனத்துக்கு, இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தனது பேட் ஒன்றினை பரிசாக அளித்தார்.
இதுதொடர்பாக விராத் கோலிக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஷாகித் அஃப்ரிடி, உங்களைப் போன்ற நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உதவியுடன் தொண்டு நிறுவனத்தின் பணி அனைவருக்கும் சென்றடையும் என்று தெரிவித்துள்ளார். விராத் கோலி கையெழுத்திட்டுள்ள அந்த பேட்டின் புகைப்படத்தையும் அஃப்ரிடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அஃப்ரிடியின் இந்த பதிவுக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள விராத் கோலி, தொண்டு நிறுவனத்துக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ஷாகித் அஃப்ரிடிக்கு இந்திய அணி வீரர்கள் கையெழுத்திட்ட விராத் கோலியின் ஜெர்ஸி ஒன்று பரிசளிக்கப்பட்டது. அஃப்ரிடியின் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் வகையில் லண்டனில் ஏலம் விடப்பட்ட அந்த ஜெர்ஸி, ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது.