டிஆர்எஸ் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்த ஐசிசி

டிஆர்எஸ் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்த ஐசிசி
டிஆர்எஸ் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவந்த ஐசிசி

பெங்களூரு டெஸ்ட் போட்டியின்போது ஏற்பட்ட டிஆர்எஸ் சர்ச்சை தொடர்பாக விராத் கோலி மற்றும் ஸ்மித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது.

டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த பெவிலியனில் இருந்த வீரர்களிடம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் உதவி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஸ்மித் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் இடையே மோதல் போக்கு ஏற்படும் சூழல் உருவானது. ஸ்மித் மீது குறை கூறுவது தவறானது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும், இந்த விவகாரத்தில் ஐசிசி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் கூறியிருந்தன.

இந்தநிலையில், பெங்களூரு டெஸ்ட் டிஆர்எஸ் சர்ச்சை விவகாரத்தில் விராத் கோலி மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com