வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு : பிசிசிஐ
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ள ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விராட் கோலி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இப்போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக திட்டமிடப்பட்டுள்ள டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் அணியில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒரு பகுதியாக இப்போட்டிகள் கணக்கிடப்படும் என்பதால் இவர்கள் இருவரும் அணியில் இணைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.