நான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்

நான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்
நான் கோலி போல ஆடியிருக்க வேண்டும் விவியன் ரிச்சர்ட்ஸ்

விராட் கோலி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் கலந்து கொள்ளும் நேர்காணல் நாளை பிசிசிஐ டிவி என்ற தளத்தில் ஒளிப்பரப்பாக உள்ளதாக பிசிசிஐ ட்வீட் செய்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. 20-ஓவர் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் ஆகிய இரண்டையும் இந்திய அணி கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடரின் போது விராட் கோலி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். இதனை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரும் பங்கேற்கும் நேர்காணல் நிகழ்ச்சி நாளை பிசிசிஐ டிவி தளத்தில் ஒளிபரப்பப்படவுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “நாளை ஒரு சிறப்பான நேர்காணல் ஒளிபரப்பப்பட உள்ளது. இதில், ஆண்டிகுவா கிங் விவியன் ரிச்சர்டஸ் மற்றும் இந்தியாவின் கிங் கோலி ஆகிய இருவரும் பங்கேற்க உள்ளனர். இந்த நேர்காணல் பிசிசிஐ டிவி தளத்தில் நாளை ஒளிபரப்பப்படும்” எனப் பதிவிட்டுள்ளது. 

இந்திய வீரர் விராட் கோலியை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் சிலர் ஒப்பிட்டு வருகின்றனர். அவர்கள் இருவரும் பந்துவீச்சாளர்களை திணறடிப்பதில் வல்லவர்கள் என்பதால் இவ்வாறு கூறி வந்தனர். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தற்போதைய தொடரில் விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்து விவியன் ரிச்சர்ட்ஸ் வர்ணனையில் கருத்து தெரிவித்தார். அதாவது போட்டியின் போது வர்ணனையில் இருந்த விவியன் ரிச்சர்ட்ஸ், “என்ன ஒரு சிறப்பான ஆட்டக்காரர். நான் விளையாடும் போது இவர் மாதிரி விளையாடியிருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என பாராட்டியது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com