வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி - கோலி, ரோகித் ஆசிர்வாதம்

வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி - கோலி, ரோகித் ஆசிர்வாதம்

வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டி - கோலி, ரோகித் ஆசிர்வாதம்
Published on

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பீப்பி ஊதி கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது மூதாட்டியிடம் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா ஆசிர்வாதம் பெற்றனர்.

உலகக் கோப்பை தொடரின் 40வது லீக் போட்டி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையே எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 314 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பங்களாதேஷ் இறுதிவரை போராடி 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

இந்தியா - பங்களாதேஷின் கிரிக்கெட் போட்டியை நேரடியாக பர்த்து ரசித்த 87 வயது மூதாட்டி ஒருவரின் செயல் அனைவரின் பார்வையையும் ஈர்த்தது. மூதாட்டி சாருலதா இந்திய தேசிய கொடியினை முகத்தில் வரைந்து கொண்டும் தேசியக்கொடி பதிந்திருக்கும் சால்வையை கழுத்தில் அணிந்து கொண்டும் பீப்பி ஊதி கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தினார். 

இதுகுறித்து அவரிடம் கேட்கும்போது, “நான் ஆப்பிரிக்காவில் இருக்கும்போதிலிருந்து பல ஆண்டுகளாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன். நான் முன்பு வேலை பார்த்து கொண்டிருந்தபோது கிரிக்கெட்டை டிவியில் பார்த்துக்கொண்டிருந்தேன். தற்போது பணி ஓய்வு பெற்று விட்டேன். அதனால் நேரில் கிரிக்கெட்டை பார்த்து ரசித்து வருகிறேன். இந்தியா கண்டிப்பாக உலகக்கோப்பையை வெல்லும். இந்தியா வெற்றிப் பெற கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். இந்திய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்தியா உலகக்கோப்பை வென்றபோது நான் அங்கிருந்தேன்” எனத் தெரிவித்தார். 

இதனையடுத்து, போட்டி முடிந்த பிறகு கேப்டன் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் மூதாட்டி சாருலதாவை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர். அப்போது, விராட், ரோகித்துக்கு மூதாட்டி ஆசையாக முத்தங்களை கொடுத்தார். மூதாட்டி சாருலதாவிடம் ஆசிர்வாதம் வாங்கிய படங்களை விராட் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களை பற்றி புகழ்ந்து பேசியுள்ள அவர், நாட்டுப்பற்றுக்கு வயது தடையில்லை என அந்தp பதிவில் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com