“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு

“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு

“அனுஷ்கா என்னை சரியாக வழிநடத்துகிறார்” - விராட் கோலி பாராட்டு
Published on

தனது மனைவி அனுஷ்கா தன்னை சரியான பாதையில் வழிநடத்துவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய வீரர் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை கடந்த 2017ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டார். கோலி விளையாடும் போட்டிகளில் மைதானத்திற்கு வரும் அனுஷ்கா, அவரைப் பார்வையாளர்கள் தளத்திலிருந்து உற்சாகப் படுத்துவார். சிலசமயம் இந்த ஜோடியை ரசிகர்கள் விமர்சனமும் செய்துள்ளனர். இருப்பினும் கோலி விளையாடும் போட்டிகளுக்கு அனுஷ்கா வருவது தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடி வரும் விராட் கோலி, அங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் பேசிய கோலி, “அனுஷ்கா ஷர்மா எனது வாழ்வில் கிடைத்தது, கிரிக்கெட் என் வாழ்வில் கிடைத்ததை விட மிகப்பெரிய வரம். ஒரு சரியான துணையை தேர்வு செய்துள்ளேன். ஏனென்றால் அவர் தனது தொழிலை தானே செய்கிறார். அத்துடன் எனக்கான இடத்தையும் முழுமையாக புரிந்து வைத்துள்ளார். அவர் என்னை சரியான பாதையில் வழிநடத்திச் செல்கிறார். அவரிடம் இருந்து நான் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com