கோலியும் டிவிலியர்ஸ்சும் டக் அவுட் ஆனதற்கு இவர்தான் காரணமா?...
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டிவிலியர்ஸ் ஆகியோர் டக் அவுட் ஆனதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்தான் காரணம் என்று கூறி நெட்டிசன்கள் அவரைக் கலாய்த்து வருகின்றனர்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாகக் கருதப்படும் அவர்கள் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் டக் அவுட் ஆகி வெளியேறினர். கடந்த வியாழக்கிழமை நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டிவிலியர்ஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். அதற்கு அடுத்த நாள் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் விராட் கோலி டக் அவுட் ஆனார். இந்த சம்பவங்களுக்குக் காரணம், பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜைனப் அப்பாஸூடன் அவர்கள் இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டதே என்று கூறி நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டனர். இருவருடனும் ஜைனப் அப்பாஸ் எடுத்துக் கொண்ட படங்கள் எதேச்சையாக குறிப்பிட்ட நாட்களில் வெளியானது. இதையடுத்து இந்த இரு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோல்டன் டக் அவுட் எனப்படும் தான் சந்தித்த முதல் பந்திலேயே டிவிலியர்ஸ் விக்கெட்டைப் பறிகொடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.