\
"கோலியும், அனுஷ்காவும் உணவு பரிமாறுவார்கள்; வேலையாட்கள் இல்லை" - சரன்தீப் சிங்

"கோலியும், அனுஷ்காவும் உணவு பரிமாறுவார்கள்; வேலையாட்கள் இல்லை" - சரன்தீப் சிங்

"கோலியும், அனுஷ்காவும் உணவு பரிமாறுவார்கள்; வேலையாட்கள் இல்லை" - சரன்தீப் சிங்
Published on

விராட் கோலி வீட்டில் வேலையாட்களே கிடையாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்

"ஸ்போர்ட்ஸ்கீடா" இணையதளத்துக்கு பேசிய சரன்தீப் சிங் "கிரிக்கெட் மைதானத்தில் நாம் பார்க்கும் விராட் கோலி வேறு. நிஜ வாழ்க்கையில் மிகவும் எளிமையான நபர் அவர். அவர் வீட்டில் வேலையாட்களே கிடையாது. அவரும் மனைவியும்தான் உணவு பரிமாறுவார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு" என்றார்.

மேலும் பேசிய அவர் "விராட் கோலி மீது அணியின் அனைத்து வீரர்களும் பெரும் மரியாதையை வைத்திருக்கிறார்கள். அவர் எளிமையான மனிதராக இருந்தாலும் மனதளவில் மிகவும் திடமானவர். அணி தேர்வுக் கூட்டத்தில் கூட அநாவசியமாக ஒரு வார்த்தை பேசமாட்டார். அனைவரும் பேசி முடித்த பின்பே தன்னுடைய முடிவை தெரிவிப்பார்" என்றார் சரன்தீப் சிங்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com