இலங்கை ரசிகருடன் டான்ஸ் போட்ட விராத் கோலி!

இலங்கை ரசிகருடன் டான்ஸ் போட்ட விராத் கோலி!

இலங்கை ரசிகருடன் டான்ஸ் போட்ட விராத் கோலி!
Published on

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா திருமண வரவேற்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது. இதில் சச்சின் உட்பட முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் யாரும் எதிர்பார்க்காத கெஸ்ட்டாக கலந்துகொண்டார், காயன் செனநாயகே!

இலங்கையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இந்த காயம், விராத் கோலியின் தீவிர ரசிகர். இவரை, கிரிக்கெட் சேனல்களில்  பார்த்திருக்க முடியும். இலங்கை கிரிக்கெட் அணி எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் இருப்பார். அப்படித்தான் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த இலங்கை அணியுடன் வந்திருந்தார். 

இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடர் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பாக விராத் கோலி அவரை அழைத்து, ‘இலங்கை-இந்தியாவுக்கான கடைசி டி20 போட்டி வரை இங்கு இருங்கள்’ என்றார். ஆச்சரியப்பட்டுப் போன காயனுக்கு பிறகுதான் விஷயமே தெரிந்திருக்கிறது, தனது திருமண வரவேற்புக்காகவே கோலி அப்படிச் சொன்னார் என்பது. அதன்படி, அவர்கள் திருமண வரவேற்பில் கலந்துகொண்டு செல்ஃபி எடுத்து திரும்பி இருக்கிறார் காயன். இந்த செல்ஃபி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி காயன் செனநாயகே கூறும்போது, ‘இந்த திருமண வரவேற்பில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரையும் சந்தித்தேன். விராத் கோலி என்னுடன் டான்ஸ் ஆடினார். கடந்த 2007-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் விளையாட இலங்கை வந்திருந்தார் கோலி. அப்போதுதான் அவரை முதன் முதலாகப் பார்த்து பேசினேன். அதில் இருந்து அவர் எப்போதெல்லாம் இலங்கை வருகிறாரோ, அப்போதெல்லாம் சந்திப்பேன். எங்கள் நட்பு தொடர்கிறது’  என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com