\
இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா ஜோடி

இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா ஜோடி

இணையத்தை கலக்கும் விராட் - அனுஷ்கா ஜோடி
Published on

புதுமண தம்பதிகளான விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, தனது காதலியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்டார். இத்தாலியில் நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், நண்பர்கள் என அனைவரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இவர்களது திருமண வரவேற்பு விழா இந்த மாதத்தின் இறுதியில் மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்டுள்ள புகைப்படம் ஒன்றை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடுமையான பனிப்பிரதேசம் போல் காட்சி அளிக்கும் அந்த இடத்தில், குளிர்கால உடையுடன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா இருவரும் செல்பி எடுத்துள்ளனர். இந்தப் புகைப்படம் வெளியான 2 மணி நேரத்திற்குள் மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. மேலும் இந்தப் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் திருமணத் தம்பதிகளை வாழ்த்தி உள்ளனர். மேலும் சிலர், ஹனிமூன் கொண்டாட்டமா? என்றும் அவர்களை கலாய்த்தும் வருகின்றனர். 

இந்தத் தம்பதியரின் திருமண வரவேற்பு அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. வித்யாசமான இந்த அழைப்பிதழ் உடன் சிறிய அளவிலான மரக்கன்று ஒன்றும் அனைவருக்கும் வழங்கப்பட்டது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com