Bicycle kick மூலம் சிக்சரை தடுக்கும் ஃபீல்டர்... வைரல் வீடியோவுக்கு சச்சின் செம ரிப்ளை!

Bicycle kick மூலம் சிக்சரை தடுக்கும் ஃபீல்டர்... வைரல் வீடியோவுக்கு சச்சின் செம ரிப்ளை!
Bicycle kick மூலம் சிக்சரை தடுக்கும் ஃபீல்டர்... வைரல் வீடியோவுக்கு சச்சின் செம ரிப்ளை!

உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில், கால்பந்து வீரர்களை போல் பை-சைக்கிள் கிக் மூலம் சிக்சருக்கு சென்ற பந்தை தடுத்து நிறுத்திய ஒரு ஃபீல்டரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த சிக்சர் சேவிங்க் பீல்டிங் வீடியோவை பார்த்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், நியூசிலாந்தின் ஜிம்மி நீஷம் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய ஆச்சரியமான உணர்வுகளை டிவிட்டரில் பகிர்ந்துள்ளனர்.

இந்தியா மட்டுமல்ல... உலகம் முழுவதும் உள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே எப்பொழுதும் மிகவும் புதுமையான விஷயங்கள் நடக்கும். பெரும்பாலான சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட பயன்படுத்தாத சில புதிய நுட்பங்களை லோக்கல் வீரர்கள் பயன்படுத்துவர். அப்படி தற்போது உள்ளூர் போட்டி ஒன்றில் நடந்துள்ள ஒரு நிகழ்வு தான், சமூகவலைதளங்களில் எல்லோராலும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

எல்லோராலும் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில், சிக்சருக்கு பறந்த பந்தை பவுண்டரி எல்லையில் இருக்கும் வீரர் தனது அசாத்திய திறமை மூலம், தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், எல்லாவிதமாகவும் அற்புதமாக பேட்டிங் செய்த பேட்ஸ்மேனையும் அவுட்டாக்கி இருக்கிறார். `ஹே எப்புட்றா’ என்பது போல் எல்லோருக்கும் அந்த வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பான ஷாட் அடித்த பேட்ஸ்மேனை தனது புட்பால் யுக்தியால் அவுட் செய்த பீல்டர்!

அங்கிருந்த ஒரு வீரர், சுழற்பந்துகூட இல்லை... வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக தன் அற்புதமான யுக்தியால், ஆஃப் சைடில் பந்தை அடிக்கிறார். அப்படி வீசப்பட்ட பந்தை, முட்டிபோட்டு மடக்கி லெக்சைடில் தூக்கி சிக்சருக்கு பறக்கவிடுகிறார் ஒரு பேட்ஸ்மேன். ஆனால் பவுண்டரி எல்லையின் அருகே நின்றிருந்த பீல்டர் ஒருவர், பேலன்ஸ் இல்லாமல் பந்தை சரியான நேரத்தில் தாவி பிடித்து தூக்கி வானத்தில் வீசி பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றுவிடுகிறார். பிறகு பந்து கீழே இறங்கும் வரை காத்திருந்த அவர், திடீரென கால்பந்து வீரர்கள் போல் அந்தரத்தில் பறந்து ஒரு பை-சைக்கிள் கிக் மூலம் பவுண்டரி லைனிற்கு உள்ளே அனுப்புகிறார். சரியாக அவர் அடித்த அந்த பந்து, பீல்டிங்கில் உள்ளே நிற்கும் மற்றொரு வீரரின் கைகளுக்கு சென்று கேட்சாக மாறியது.

சிக்சருக்கு சென்ற அந்த பந்தை மற்ற யாராக இருந்தாலும் பவுண்டரி லைனுக்கு உள்ளே தூக்கி எறிந்து தடுத்திருக்கலாம். ஆனால் அதை அந்த வீரர், சரியாக உள்ளே இருக்கும் மற்றொரு பீல்டரின் கைகளுக்கு செல்லுமாறு கிக் செய்து, எந்த தவறான ஷாட்டும் விளையாடாத பேட்ஸ்மேனை அவுட்டாக்கிய விதம் எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

வீடியோவை பார்த்து டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், “கால்பந்து விளையாடத் தெரிந்த ஒரு பையனை அழைத்து வந்து கிரிக்கெட் விளையாடும்போது இதுதான் நடக்கும்” என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் கூறுகையில், "நிச்சயமாக இது எல்லா காலத்திற்கும் மிகச்சிறந்த கேட்ச்" என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் நியூசிலாந்தின் ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீஷம் 'முற்றிலும் சிறப்பானது' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Surely the greatest catch of all time pic.twitter.com/ZJFp1rbZ3B

Absolutely outstanding https://t.co/Im77ogdGQB

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com