சச்சின் மகனுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி !

சச்சின் மகனுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி !

சச்சின் மகனுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி !
Published on

சச்சின் டெண்டுல்கரின் மகனுக்கு முன்னாள் வீரர் வினோத் காம்பளி வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான வினோத் காம்ப்ளியும் சிறுவயது முதல் நண்பர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் ஜோடியாக அதிக ரன்கள் சேர்த்து சாதனைப் படைத்தனர். இவர்கள் இருவரும் ஆடுகளத்திலும் வெளியிலும் சிறப்பான நண்பர்களாக இருந்துவருகின்றனர். 

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வினோத் காம்ப்ளி வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “பிறந்தாள் வாழ்த்துகள் அர்ஜூன். நீ வாழ்வில் உயரமாக வளர்ந்ததை போல கிரிக்கெட் விளையாட்டிலும் வளர வேண்டும்” என்று தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் அர்ஜூன் டெண்டுல்கரின் சிறு வயது புகைப்படத்துடன் இந்தப் பதிவை செய்துள்ளார். 

அர்ஜூன் டெண்டுல்கர் தற்போது உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அவருக்கு இந்திய அணியில் இடம் பெற்று தந்தையை போல் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com