\
‘2020 ஒலிம்பிக்’ - இந்திய மல்யுத்த வீராங்கனை போகட் தகுதி  

‘2020 ஒலிம்பிக்’ - இந்திய மல்யுத்த வீராங்கனை போகட் தகுதி  

‘2020 ஒலிம்பிக்’ - இந்திய மல்யுத்த வீராங்கனை போகட் தகுதி  
Published on: 

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தகுதி பெற்றுள்ளார். 

பெண்களுக்கான மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த சாம்பியன்ஷிப் தொடரில் 57 எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகட் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். இந்தத் தொடரின் வெண்கல பதக்கப் போட்டிக்கு வினேஷ் போகட் முன்னேறி உள்ளார். 

இதன்மூலம் 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு வினேஷ் தகுதி அடைந்துள்ளார். இந்தியா சார்பில் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் முதல் மல்யுத்த வீராங்கனை இவரே ஆவார். வினேஷ் போகட் பிரபல மல்யுத்த வீராங்கனை குடும்பத்தை சேர்ந்தவர். இவரது சகோதரிகள் கீதா போகட், பாபிதா போகட் உள்ளிட்டோரும் மல்யுத்த வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com