அணிக்கு திரும்பிய விஜய் சங்கர், ஜாதவ்: பங்களாதேஷை இன்று சந்திக்கிறது, இந்தியா!

அணிக்கு திரும்பிய விஜய் சங்கர், ஜாதவ்: பங்களாதேஷை இன்று சந்திக்கிறது, இந்தியா!

அணிக்கு திரும்பிய விஜய் சங்கர், ஜாதவ்: பங்களாதேஷை இன்று சந்திக்கிறது, இந்தியா!
Published on

உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில், இந்திய அணி இன்று பங்களாதேஷ் அணியுடன் மோதுகிறது.  

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதில் பங்கேற்கும் அணிகள் இப்போது பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி கார்டிப்பில் இன்று நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் மோது கின்றன. 

இந்திய அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. அதனால், இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக ஆடும் என்று நம்பலாம்.

கடந்த போட்டியில் காயம் காரணமாக, விஜய் சங்கர், கேதர் ஜாதவ் ஆகியோர் களமிறங்கவில்லை. அவர்கள் காயம் குணமாகிவிட்டதால் இன்றைய போட்டியில் ஆடுகிறார்கள். பங்களாதேஷ் அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத இருந்தது. மழை காரண மாக அந்தப் போட்டி, கைவிடப்பட்டது.

பிரிஸ்டலில் நடைபெறும் மற்றொரு பயிற்சி போட்டியில், நியூசிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியை சந்திக்கிறது. இந்திய நேரப்படி இந்தப் போட்டி, பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com