இலங்கை அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது மற்றும் மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட வீரர்கள் அடங்கிய பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இதில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார்.தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான 26 வயதாகும் விஜய் சங்கர், திருநெல்வேலியில் பிறந்தவர். சிறுவயது முதல் அவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்திய அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து விஜய் சங்கர்'' சிறுவயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோதே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது'' என்று தெரிவித்தார்.