விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்துமா தினேஷ் கார்த்திக் டீம்?

விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்துமா தினேஷ் கார்த்திக் டீம்?

விஜய் ஹசாரே கோப்பை: கர்நாடகாவை வீழ்த்துமா தினேஷ் கார்த்திக் டீம்?
Published on

விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதிப் போட்டியில் தமிழகம் - கர்நாடக அணிகள் பெங்களூரில் இன்று மோதுகின்றன. 

விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்தது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியும் மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இறுதிப் போட்டி, பெங்களூரில் இன்று காலை நடக்கிறது.

நடப்புத் தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக தமிழக அணி இருக்கிறது. அந்த அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த், பாபா அபராஜித், ஷாரூக் கான், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டி வருகிறார்கள். பந்துவீச்சில் அஸ்வின், முகமது, டி.நடராஜன் வலுவாக இருக்கிறார்கள்.

கர்நாடகா அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், மயங்க் அகர்வால், கிருஷ்ணப்பா கவுதம் சிறந்த ஃபார்மில் உள்ளனர்.  பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com